ம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்: ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் சென்ற காங்கிரஸ்

  Newstm News Desk   | Last Modified : 04 Jun, 2018 05:33 am

congress-submits-proof-of-60-lakh-fake-voters-in-madhya-pradesh

மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு பாரதிய ஜனதா தான் காரணம் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்திய பிரதேசத்தில் தேர்தல் மோசடிகள் நடந்து வருவதாகவும், சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதை ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், "இது எதிர்பாராமல் நடந்த தவறு அல்ல, அதிகார துஷ்ப்ரயோகம்" எனவும் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஸ்கிந்தியா இதுகுறித்து பேசியபோது, இதற்கு காரணம் பாரதிய ஜனதா தான் என குற்றம் சாட்டினார். "கடந்த 10 ஆண்டுகளில், மாநிலத்தின் மக்கள்தொகை 24% அதிகரித்துள்ளது. அதேநேரம், வாக்காளர்கள் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. இது எப்படி சாத்தியமாகும். இதற்கு காரணம் பா.ஜ தான். ஒரு வாக்காளரின் பெயர் 26 முறை பதிவாகியிருக்கிறது. இதுபோல பல முறைகேடுகள் உள்ளன" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close