இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 11:52 am

neet-exam-results-to-be-declared-today

நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்படும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) CBSE நடத்தியது.

தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ், இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 6ந் தேதி நடந்து முடிந்தது.

மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25ந்தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இன்றே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று மனித வளத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று பகல் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close