உலகிலேயே அதிகமாக உழைக்கும் மும்பை வாசிகள்: ஆய்வில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 10:57 am
mumbai-people-works-longest-hours-in-the-world-survey

உலகிலேயே அதிகமாக உழைப்பவர்கள் மும்பை வாசிகள் தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
சுவிட்சர்லாந்து முதலீட்டு வங்கி சமீபத்தில் உலகில் அதிகம் உழைக்கும் மக்கள் உள்ள நகரங்கள் குறித்து அய்வு நடத்தியது. 
இதில் மும்பை முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பையில் உள்ள தொழிலாளர்கள் ஒரு வருடத்தில் 3,315 மணி நேரம் உழைக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு அவர்கள் 10 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்கிறார்கள் என்று அந்த அய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
அடுத்தடுத்த இடங்களில் ஹனாய், மெக்சிகோ சிட்டி, புது டெல்லி மற்றும் போகோடா ஆகிய நகரங்கள் உள்ளன. மேலும் ஹெல்சின்கி, மாஸ்கோ, கோபென்ஹாகென், பாரிஸ், ரோம் ஆகிய நகரங்களில் இருக்கும் தொழிலாளர்கள் குறைவான நேரம் உழைக்கின்றனர். 
அதிகமான நேரம் உழைத்தாலும் மும்பை வாசிகளுக்கு அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. அவர்கள ஒரு ஐபோன் எக்ஸ் வாங்குவதற்கு 917.8 மணிநேரம் உழைக்க வேண்டும். புது டெல்லியை பொறுத்தவரை அவர்கள் 804 மணிநேரம் உழைக்க வேண்டும். ஆனால் சூரிச் தொழிலாளர்கள் 38.2 மணி நேரம் உழைத்தாலே ஒரு ஐபோன் எக்ஸ் போனை வாங்கி விடலாம் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close