நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! முதல் மதிப்பெண் 691

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 02:56 pm
neet-exam-results-released

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் சரியாக 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கடந்த ஆண்டு முதல் கட்டயாமாக்கப்பட்டது. இந்த ஆண்டு நீட் தேர்வு கடந்த மே 6ம் தேதி நடைபெற்றது. இதனை நாடு முழுவதும் 13 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.07 லட்சம் மாணவர்களும் தேர்வை எழுதினர். தமிழ் மொழியில் 24,720 பேர் தேர்வு எழுதினர். மேலும் தமிழ் மொழி நீட் தேர்வுத்தாளில் சுமார் 40 எழுத்துப்பிழைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன் 5) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று(ஜூன்.4) வெளியாகும் என இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், 12.30 மணிக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.  நாடு முழுவதும் தேர்ச்சி பெற்றவர்களில் 720க்கு 691 மதிப்பெண் பெற்று கல்பனா குமாரி என்ற மாணவி நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவுக்கு 96 மதிப்பெண்ணும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தேர்வு முடிவில் மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு பாட வாரியாக மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், மதிப்பெண்களின் சதவீதம், அகில இந்திய அளவில் ரேங்க், கம்யூனிட்டி ரேங்க் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மாநில வாரியாக எந்த ரேங்க் என்பது தேர்வு முடிவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close