ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை: ஹரியானா அரசு அதிரடி

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 04:37 pm
haryana-decides-to-give-15-days-paternity-leave-to-all-male-government-employees

இந்தியாவில் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆண்களுக்கும் விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது ஹரியானா மாநில அரசு. 

அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் பெண்களின் பிரசவ சமயத்தில் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அரசுத்துறையில் 6 மாத காலம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையின் பராமரிப்பில் ஆண்களுக்கும் பங்கு உண்டு என்ற நோக்கில் அவர்களுக்கும் விடுப்பு அளிக்க ஹரியானா மாநிலம் முன்வந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close