ஃ பரிதாபாத்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 04:46 pm

4-year-old-raped-stabbed-dumped-in-container-in-haryana-s-faridabad

ஃ பரிதாபாத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் அசயாத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த விரேந்தர் என்பவன் அழைத்துச் சென்றுள்ளான். விரேந்தர் அந்த சிறுமியின் அப்பாவுக்கு சொந்தமான கடையில் கடந்த 9 வருடங்களாக வேலை செய்து வந்தவன். இவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். பின்னர் சிறுமியின் உடலை தன வீட்டில் உள்ள ஒரு பெரிய அண்டாவில் போட்டு மூடிவிட்டான். பின்னர் வழக்கமாக கடைக்கு சென்று வேலையைத் தொடர்ந்தான். மாலை நேரத்தில் தான் குழந்தை காணாமல் போனது பெற்றோருக்கு தெரிய வந்து தேட ஆரம்பித்தனர். அப்பகுதியில் உள்ளவர்கள் விரேந்தர் தான் குழந்தையை கூட்டிச் சென்றான் எனக்கூற, அவனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விரேந்தரின் தாயார் அவர்களை தடுத்துள்ளார். அவரை மீறி அவரது வீட்டில் தேடிய போது ட்ரம்மில் இருந்து குழந்தையின் உடலை எடுத்தனர். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "நான் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. மிகவும் கொடூரமான முறையில் தான் எனது மகள் இறந்திருப்பாள். குற்றவாளிக்கு கண்டிப்பாக மரண தண்டனை கிடைக்க வேண்டும். எங்களது மகளின் இறப்பை எவற்றாலும் ஈடு செய்ய முடியாது" என கண்ணீருடன் தெரிவித்தனர். 

பின்னர் அம்மாநகர காவல்துறை அதிகாரி, "குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரும் முயற்சியில் தான் காவல்துறையும் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close