அமைச்சர்களுக்கு புதிய கார், அலுவலக மறு சீரமைப்பு எதுவும் இல்லை: குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 09:40 pm
no-new-cars-or-office-revamp-to-ministers-for-one-year-hd-kumaraswamy-says

முதல் ஒரு வருடத்திற்கு அமைச்சர்களுக்கு புதிய கார், அலுவலக மறு சீரமைப்பு எதுவும் கிடையாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "நான் ஏற்கனவே சொன்னதுபோல் தேவையில்லாத செலவுகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஒரு வருடத்திற்கு அமைச்சர்களுக்கு புதிய கார் எதுவும் கிடையாது. எந்த அமைச்சகத்துக்கும் அரசு சார்பில் புதிய கார் வாங்கப்படாது. அதேபோல் அமைச்சர்களின் அலுவலகங்கள் மறுசீரமைப்பு செய்வதும் இந்த வருடத்தில் கிடையாது, அடுத்த வருடம் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்" என தெரிவித்தார். முதற்கட்டமாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.     

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close