நலம் பெற வேண்டிய அனைவருக்கும் நன்றி: ஜெட்லி உருக்கம்!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2018 09:14 am

arun-jaitley-back-home-after-kidney-transplant

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து நேற்று இல்லம் திரும்பினார். மருத்துவரின் அறிவுரைப்படி அவர் விரைவில் பணியைத் தொடர்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த மே 14ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 3 வாரங்களுக்கு மேல் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது உடல்நிலை சீராகி, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலும் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வீடு திரும்பிய ஜெட்லி, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், தான் நலம் பெற இறைவனிடம் வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று வீடியோ கான்ஃபெரென்சிங் மூலம் அவர் மூத்த அதிகாரிகளுடன் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் முழுமையாக பணியில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது. 

ஜெட்லி சிகிச்சை பெறுவதால், அவருடைய நிதியமைச்சக பொறுப்பை அமைச்சர் பியூஸ் கோயல் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close