ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 10:22 am

p-chidambaram-gets-relief-till-july-10-in-aircel-maxis-case

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

மத்திய முன்னாள்  நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த போதும், டெல்லி சிபிஐ நீதிமன்றம் கார்த்திக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. வரும் ஜூலை 10ம் தேதி வரை கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து ஏர்செல்- மேக்சிஸ் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளதாக அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ப. சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி பட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதான முதல் விசாரணையில், ஜுன் 5ம்  தேதி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. அதையடுத்து ஜூன் 5ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இன்று நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடையும் நிலையில், மீண்டும் அவரை கைது செய்வதற்கான தடையினை நீதிபதி ஓ.பி.ஷைனி ஜூலை 10 வரை நீட்டிப்பு செய்துள்ளார். இதனால் இன்று ப.சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பாக ஆஜரானாலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது. 

Advertisement:
[X] Close