டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 03:15 pm
p-chidambaram-appears-before-ed-in-cbi-delhi

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பசிதம்பரம் இன்று ஆஜராகியுள்ளார். 

ஏர்செல்- மேக்சிஸ் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ப. சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி பட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனு மீதான முதல் விசாரணையில், ஜுன் 5ம்  தேதி வரை ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. இதனால் தடை முடிந்து ஜூன் 5ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று அவர் ஆஜராகும் சமயத்தில் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என பேசப்பட்டது. 

இதற்கிடையே,  நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டெல்லி சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. அதன்படி, ஜூலை 10 வரை அவரை கைது செய்வதற்கான தடையை நீதிபதி ஓ.பி.ஷைனி ஜூலை 10 வரை நீட்டிப்பு செய்துள்ளார். இதனால் கைது செய்யப்படும் நிலையில் இருந்து ப.சிதம்பரம் தப்பித்துளார். இருந்தாலும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர் இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close