'காலா' வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 02:02 pm
court-directs-karnataka-govn-to-give-enough-security-to-theatres-which-screening-kaala

காலா வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் காலா படம் வெளியாக உள்ள தியேட்டர் மற்றும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமனற்ம், "கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் தியேட்டர் மற்றும் ரசிகர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். படம் எந்தெந்த தியேட்டர்களில் வெளியாகிறது என்ற பட்டியலை தயாரிப்பாளர் தனுஷ் அரசுக்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தது.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக பேசியதாக ரஜினியின் காலா படத்தை அங்கு வெளியிட கர்நாடக வர்த்தக சபை மற்றும் சில கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்நிலையில், "ஒரு நடிகர் கூறும் கருத்துக்கும் அவர் நடிக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close