ஜூன் 30ந்தேதி ஆகாஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 03:36 pm

akash-ambani-shloka-mehta-to-get-engaged-on-june-30

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் சுலோகா மேத்தாவின் நிச்சயதார்த்தம் ஜூன் 30ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரியின் மகளான சுலோகா மேத்தாவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக முன்னரே அறிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் தற்போது இவர்களது திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்பானியின் வீட்டில் வரும் ஜூன் 30ந்தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக வீடியோ வடிவில் அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பிரபல ஃபேஷன் இதழான வோக் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

சிறு வயது முதலே நண்பர்களான ஆகாஷ் மற்றும் சுலோகாவின் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 4-5 நாட்களுக்கு மும்பையில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடக்க உள்ளது. 

அழைப்பிதழ் வீடியோவை பார்க்க: https://www.instagram.com/p/Bjm-gGMlsOV/?utm_source=ig_embed

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close