இறுதியில் உண்மையே வெல்லும்: தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சசி தரூர்

  Newstm News Desk   | Last Modified : 05 Jun, 2018 10:13 pm

shashi-tharoor-issues-statement-on-allegations-against-him

தனது மனைவி மரணம் தொடர்பாக தன் மீது அபத்தமாக குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் கடைசியில் உண்மையே வெல்லும் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆதாரமில்லாமல் டெல்லி போலீசார் தன் மீது குற்றம் சாட்டுவதாகவும், இதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதாகவும் தரூர் கூறியிருந்தார். இந்நிலையில், இதை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சுனந்தாவின் மரணம் தொடர்பான வழக்கை சசி தரூர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் தன் மீது கூறப்படும் குற்றசாட்டுகள் குறித்து சசி தரூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "எனது மனைவியின் மரணம் தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றம் என்னை ஜூலை 7ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளது. 

இந்த வழக்கு விசாரணையில் தொடக்கம் முதலே நான் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன் என்பதை இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன். இந்த வழக்கு முறையாக நடக்க தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பேன். இந்த வழக்கை பயன்படுத்தி எனது பெயரை கெடுக்க சிலர் என் மீது அபத்தமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அவற்றை எதிர்த்து தொடர்ந்து சட்டரீதியாக போராடுவேன். இறுதியில் சட்டத்தின் படி உண்மையே வெல்லும். மேலும் ஊடகங்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close