• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

காலா திரைப்படத்தை வெளியிடுவது நல்லதல்ல- குமாரசாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Jun, 2018 06:40 pm

karnataka-cm-kumarasamy-speaks-about-kaala-issue

கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளதால் காலா படம் கர்நாடகாவில் திரையிடபோவதில்லை என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் தயாரிப்பாளர் தனுஷ். காலா படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் என வுண்டர்பார் சார்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, “காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது. காலாவை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் என கூறினார். மேலும் காலா திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் வரவில்லை எனக்கூறிய அவர், உத்தரவு நகல் கிடைத்தவுடன் திரையரங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.

Advertisement:
[X] Close