காலா படத்தை அனுமதிப்போம் ஆனால் ஒரு கண்டிஷன்- கர்நாடக வர்த்தக சபை

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Jun, 2018 09:37 pm
karnataka-business-council-says-some-condition-to-rajinikanth

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என்று ரஜினி கூறினால் காலா படத்தை வெளியிட அனுமதிப்போம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நடிகர் ரஜினிகாந்திற்கு நிபந்தனை விதித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் மாமனார் நடிக்க, மருமகன் தயாரிக்க, அரசியல் ஆர்ப்பரிக்கும் வசனங்களை முன்வைத்து வெளிவரவுள்ள காலாவிற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் காலா வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலா திரைப்படம் இன்னும் 2 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் கர்நாடகாவில் காலாவை வெளியிட அனுமதிக்கோரி பல்வேறு தரப்பினர் கர்நாடகாவிற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் கர்நாடகாவில் காலா வெளியாவது நல்லதல்ல என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியும் கைவிரித்துவிட்டார்.

கர்நாடகாவில் காலா வருமா? வராதா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் கர்நாடக வர்த்தக சபை ரஜினிக்கு ஒரு நிபந்தனை வழங்கியுள்ளது. 
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால் தான் காலாவிற்கு கன்னட அமைப்பினர் தடை விதித்துள்ளனர். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால், கர்நாடகாவில் காலாவை திரையிடுவோம் என கூறியுள்ளது. வசூலுக்காக கன்னட அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று காலா கவிழ்ந்துவிடுவாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close