நீட் தோல்வியால் ஹைதராபாத் மாணவி தற்கொலை!

  Newstm News Desk   | Last Modified : 05 Jun, 2018 09:59 pm

hyderabad-student-jumps-off-a-10-storey-building-after-neet-results

ஹைதராபாத்தை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால், ஷாப்பிங் மாலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் உள்ள லட்ச கணக்கான மாணவர்கள் எழுதிய நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. ஹைதராபாத்தின் காச்சிகுடா பகுதியை சேர்ந்த மாணவி ஜஸ்லீன் கவுர், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்  கிடைக்காததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானாராம். இன்று காலை அபிட்ஸ் பகுதியில் உள்ள மயூரி காம்ப்ளக்ஸ் என்ற ஷாப்பிங் மாலுக்கு அவர் சென்றுள்ளார். அந்த கட்டிடத்தின் 10வது மாடிக்கு நேராக சென்ற அவரை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தது கீழே இறங்க வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால், அவர் கீழே குதித்து சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்தார். 

நேற்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவியும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close