பிட்காயின் மோசடியில், ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை

  Newstm News Desk   | Last Modified : 06 Jun, 2018 05:46 am

shilpa-shetty-s-husband-raj-kundra-questioned-in-bitcoin-scam

பிரபல இணைய கரன்சியான பிட்காயின் மூலம் நடந்த பண மோசடி விவகாரத்தில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மற்றும் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பிட்காயின் மூலம் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவின் பெயர் பலமுறை வந்ததை தொடர்ந்து, அவர் தரப்பை கேட்க அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தாக கூறினர். 

'கெயின்பிட்காயின்' என்ற நிறுவனம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்நிறுவன தலைவர் அமித் பரத்வாஜ் மற்றும் 8 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 8000 அந்நிறுவனத்தில் பேர் முதலீடு செய்ததாவும், அவர்களுக்கு ரூ.2000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. பரத்வாஜ் மற்றும் அவரது சகோதரரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். 

உலகெங்கும் பிட்காயின் என்ற புதிய இணைய கரன்சி பிரபலமாக வளர்ந்து வருகிறது. இதை பயன்படுத்தி, பல போலி நிறுவனங்கள், பிட்காயின் வர்த்தகர்களாக தங்களை காட்டிக்கொண்டு, முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்தனர். கடந்த ஆண்டு, பிட்காயின் மோசடிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிட்காயின்களுக்காக எந்த விதிமுறைகளும் இதுவரை வரையறுக்கப்படவில்லை என கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி, எந்த நிறுவனத்துக்கும் பிட்காயின் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்காததால், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close