குடியரசுத் தலைவர் மாளிகையில் இஃப்தார் விருந்து ரத்து! 

  Newstm News Desk   | Last Modified : 06 Jun, 2018 08:15 am

rashtrapati-bhavan-to-skip-iftar-party

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜானில், இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். புனித மாதத்தில் தினமும் நோன்பு முடிப்பதை இஃப்தார் என்று சொல்வார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் இஃப்தார் நோம்பு திறப்பு விருந்து நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என்று கூறப்படுகிறது. 

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இஃப்தார் நோன்பு திறப்பது ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதில், விருந்துக்கான செலவு அனாதை தொகை இல்லங்களுக்கு அளிக்கப்பட்டது. அவர் குடியரசுத் தலைவராக இருந்த 2002-07 வரையிலான காலம் முழுக்க விருந்து வழங்கப்படவில்லை. 

அதன்பிறகு, பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் ஆன பிறகு, இஃப்தார் நோன்பு திறப்பு விருந்து வழங்கப்பட்டது. அதைப் பிரனாப் முகர்ஜியும் தொடர்ந்தார். ஆனால், புதிதாகக் கடந்த ஆண்டுப் பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலாமைப் பின்பற்றி விருந்து நிகழ்ச்சியை ரத்துச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதைக் குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஊடகப் பிரிவு செயலாளர் அசோக் மாலிக் உறுதி செய்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை என்பது மதச்சார்பற்ற நாட்டின் தலைமையிடமாகும். இங்கு மதம் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் தவிர்க்கப்படுகிறது. நாட்டு மக்கள் அளிக்கும் வரிப் பணம் நாட்டின் முன்னேற்றப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குப் பயன்படக் கூடாது" என்றார். 

ஆனால், இஃப்தார் விருந்து ரத்து பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்ற பிறகு, மதம் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுவது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அழகுடனும் கம்பீரத்துடனும் கட்டப்பட்டது குடியரசுத் தலைவர் மாளிகை. அப்போது இருந்தே, அங்கு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்மஸ் கேரல்ஸ் எனப்படும் ஏசு பிறப்புப் பாடல்கள் பாடப்படுவது உண்டு. கடந்த டிசம்பரில் கேரல்ஸ் பாடுவதும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்பு, மும்பை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த 2008ம் ஆண்டு மட்டும் கிறிஸ்மஸ் கேரல்ஸ் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close