ஆதரவற்ற குழந்தைக்கு தாய் பால் கொடுத்த பெண் போலீஸ்!! 

  சுஜாதா   | Last Modified : 06 Jun, 2018 12:25 pm
woman-constable-breastfeeds-the-orphan-baby

பெங்களூரு: பிறந்த பச்சிளம் குழந்தை தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்துள்ளது. இதனை பார்த்த போலீசார் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதலுதவி செய்த மருத்துவர்கள் மீண்டும் குழந்தையை போலீசாரிடமே ஒப்படைத்துள்ளனர். அப்போது பசியால் அழ தொடங்கிய குழந்தை அழுகையை நிறுத்திய பாடில்லை. இதனால் இரக்கம் அடைந்த அர்ச்சனா என்ற பெண், போலீஸ் குழந்தைக்கு தாய் பால் கொடுத்துள்ளார். இந்த பெண் போலிசுக்கு பிறந்து மூன்று மாதமே ஆன ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மக்கள் அனைவரும் பெண் போலீசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தற்போது அக்குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அக்குழந்தைக்கு குமாராசாமி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.         

இச்சம்பவம் குறித்து அர்ச்சனா கூறியதாவது:- இந்த குழந்தையின் அழுகுரலை கேட்கையில் எனது குழந்தையின் அழுகுரல் போன்று இருந்தது. எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை. குழந்தையின் பசியை தீர்க்கவேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close