கூடுதல் லக்கேஜ்க்கு அபராதம்- ரயில்வே அறிவிப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Jun, 2018 06:56 pm

railways-to-charge-6-times-more-for-extra-luggage

ரயிலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பொருட்களை எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு, 6 மடங்கு அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ரயில் பயணத்தின் போது பயணிகள் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் பொருட்கள் எடுத்து வருவதாகவும், இதனால் சக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.‌ இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக பொருட்களை எடுத்து செல்லும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் விதிகளை தீவிரமாக அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடைக்கு, லக்கேஜ் கட்டணமாக ஒன்றரை மடங்கு கட்டணம் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதை காட்டிலும் அதிக எடையுடைய பொருட்களை கொண்டு வந்தால், லக்கேஜ் கட்டணத்தை விட 6 மடங்கு அபராதமாக வசூலிக்கப்படும். 

தூங்கும் வசதி பெட்டிகளில் 40 கிலோ எடையும், 2 ஆம் வகுப்புப் பெட்டிகளில் 35 கிலோ எடையும் பொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம். எனவே அதிக எடையுடைய பொருட்களை பயணிகள் எடுத்த வரக் கூடாது, பொருட்களுக்கான பிரத்யேக பெட்டிகளில் எடுத்து வரப்படும் இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக 6 ஆம் தேதி வரை பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close