அரசு அலுவலர்களுக்கு பாலியல் தொழில் செய்பவர்களே மேல்- பாஜக எம்.எல்.ஏ

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Jun, 2018 07:55 pm

prostitutes-better-than-govt-officials-says-bjp-mla-surendra-singh

அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என உத்தரபிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உடன் காணொலி மூலம் அண்மையில் பேசிய பிரதமர் மோடி, ஊடகம் மீது புகார் சுமத்தும் பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது தவறுகள் மசாலா தருவதுபோல் உள்ளதை சிந்திப்பதில்லை. இது கட்சியை காயப்படுத்துகிறது என கூறியிருந்தார். கருத்து தெரிவிக்கும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பாஜகவினருக்கு அறிவுரைகளையும் வழங்கினார். ஆனால் சர்ச்சைக்கு தேவையான மசாலாக்களை தொடர்ந்து பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங், அரசாங்க அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், செய்யும் வேலைக்கு காசைக்கு வாங்கிக் கொண்டு தங்கள் பணியை சரியாக முடித்துவிடுவார்கள். ஆனால் அரசு அலுவலகத்தில் பணிப்புரியும் அலுவலர்கள் செய்யும் வேலைக்கு ஊதியம் கொடுத்தாலும் வேலையை முடிப்பார்களா என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை.  அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால், அவர்கள் பேசுவதை பதிவு செய்யுங்கள். லஞ்சம் வாங்கியும் வேலை செய்யாமல் இருந்தால், அவர்களை செருப்பால் அடியுங்கள்.” என கூறினார்.

முன்னதாக சுரேந்திர சிங் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்றும், பிரதமர் மோடியை பகவான் ராமரின் மறுஅவதாரம் என்றும் குறிப்பிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close