காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Jun, 2018 12:25 am
masood-hussain-appointed-as-cauvery-management-board-leader

காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேனை நியமித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு வாரியம் அமைப்பதற்காக நடவடிக்கைகளை எடுக்காமல் இழுத்தடித்து வந்தது.  இதனால் மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. வாரியமா, ஸ்கீமா என்ற பிரச்னைக்கு பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும், அதையும் பருவமழைக்கு முன்னதாக அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை கடந்த வாரம் அரசிதழில் வெளியிட்டது.

இந்நிலையில் மத்திய நீர் ஆணைய தலைவராக இருக்கும் மசூத் உசேன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். 

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் பிரபாகரன் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினராக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close