இப்போ தேர்தல் நடத்துங்க பார்க்கலாம்: பா.ஜ.க-வுக்கு அகிலேஷ் சவால்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 04:24 am
bjp-will-be-routed-if-elections-were-held-today-akhilesh-yadav

நாடாளுமன்ற தேர்தல் தற்போது நடைபெற்றால் பாரதிய ஜனதா மாபெரும் தோல்வியடையும் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆரூடம் கூறியுள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்திய மக்கள் பாரதிய ஜனதா மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவர்கள் கோபத்தின் வெளிப்பாடு நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க அடைந்த தோல்வியில் தெரிகிறது என்றார். "நுபுர் மற்றும் கைரானா இடைத்தேர்தல்களில் பா.ஜ சந்தித்த தோல்வியை பார்க்கும் போது, மக்கள் பா.ஜ-வின் போலி வாக்குறுதிகளால் பொறுமை இழந்துவிட்டது தெரிகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஒன்றுசேர்ந்து வாக்களித்து அக்கட்சியை தோல்வியடைய வைத்தனர். 

இன்று உத்தர பிரதேச தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நாளில் அவர்கள் நடத்தட்டும் பார்க்கலாம். படுதோல்வி அடைந்துவிடுவார்கள். ஆனால், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மக்களின் கவனத்தை சிதைக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close