குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி நாக்பூர் சென்றார் பிரணாப்!

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 11:04 am
his-speech-will-forgetten-and-they-promote-visuals-pranab-mukkerji-s-daughter-warns-her-father

ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்கும் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு மூன்று நாள் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் உரையாற்ற வேண்டுமென முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்துள்ளது.  ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிராணப் முகர்ஜி கலந்து கொள்ளக் கூடாது என காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால் என்ன எல்லாம் பேசலாம் என்று ப.சிதம்பரம் ஆலோசனை கூட வழங்கியிருந்தார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது. மனதில் உள்ள அனைத்துமே விழாவில் பேசுவேன் என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதனையடுத்து அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி பா.ஜ.கவில் இணைந்துவிட்டதாக செய்திகள் வந்தன. இதுகுறித்து அவர்  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாக்பூரில் நடக்கும ஆர்.எஸ்.எஸ்/ பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு தவறான கதைகளை பரப்ப உதவுகிறீர்கள் என்று தனது தந்தையை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மற்றொரு பதிவில், எனது தந்தை தற்போதாவது பா.ஜ.கவின் தந்திரம் குறித்து அறிந்து கொள்வார் என நினனக்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-காரர்களே நீங்கள் அங்கு சென்று பேசுவதை நம்பமாட்டார்கள். நீங்கள் அங்கு பேசுவது காற்றோடு கரைந்துவிடும் ஆனால் அவர்கள் நீங்கள் அங்கு சென்ற காட்சிகளை கொண்டு பொய்யான தகவல்களை வெளியிடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரணாப் முகர்ஜி நாக்பூர் சென்றுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close