உ.பி.யில் பச்சிளம் குழந்தையை தெருவில் விட்டுச்சென்ற பெண்

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 05:34 am

up-woman-abandons-newborn-baby-caught-on-cctv-camera

உத்திர பிரதேசத்தில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை காரில் வந்த பெண் தெருவில் விட்டு செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

உத்திர பிரதேச மாநிலம் முசஃபர் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சியில், குறுகலான சந்தில் சாம்பல் நிற சான்ட்ரோ கார் செல்கிறது. திடீரென்று நின்ற காரின் ஜன்னல் வழியாக முகத்தை சிவப்பு துப்பட்டாவால் மறைத்து கொண்ட பெண் ஒருவர் பிறந்து சில மாதங்களே ஆன பெண் குழந்தையை ஒரு வீட்டு வாசலில் வைக்கிறார். பின்னர் அந்த கார் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்வது தெரிகிறது. 

பின்னர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனனக்கு சென்றனர். இதுகுறித்து கோட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கார் ஹரியானா மாநில நம்பர் பிளேட்டுடன் இருந்தது தெரியவந்துள்ளது. 

மேலும் அந்த குழந்தை உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close