கனமழையினால் வெள்ளத்தில் மிதந்த மும்பை மாநகரம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 03:51 pm
heavy-rainfall-in-mumbai

இன்று பெய்த கனமழையினால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தென் இந்தியாவில் பருவ மழை தொடங்கியுள்ளதால் முதற்கட்டமாக கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கர்நாடகா, தமிழகம் என மழை பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. இன்று சுமார் அரை மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையெங்கும் மழைநீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைக்கு முன்பாக பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளன. அரை மணி நேரம் பெய்த மழையிலே மும்பை நகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதனால் போக்குவரத்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close