ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப்; கடுப்பான காங்கிரஸ்

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 05:37 am

pranab-shares-dais-with-rss-chief-to-the-ire-of-congress

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இளம் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கும் முகாமில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இளம் உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை அவர் ஏற்று நாக்பூர் சென்றது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் மகள் கூட,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் சர்சங்கசலக் ஹெட்கேவாரின் நினைவிடத்திற்கு பிரணாப் சென்று மரியாதை செலுத்தினர். அவரது பயணத்தில் அங்கு செல்ல திட்டமிடப்படாத நிலையில், திடீரென அங்கு செல்ல அவர் முடிவெடுத்தார். பின்னர் பயிற்சி முகாமில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் சேர்ந்து மேடையில் பிரணாப் அமர்ந்தார். அப்போது உரையாற்றிய பிரணாப், "மகிழ்ச்சியான ஒரு நாட்டை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது. தேசியவாதம் என்பது தானாக வரவேண்டும், எந்த மதத்திற்கும் இனத்திற்கும் சொந்தம் கிடையாது. பண்டிதர் நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தில் கூறியது போல, தேசியவாதம் என்பது, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக் போன்ற பல இந்தியர்கள் ஒன்று  கூடும் போது தான் உருவாகும்" என்றார்.

பிரணாப் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close