காஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:36 am
kashmir-soldier-dies-of-injuries-after-militant-attack

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில், இன்று ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டார்.

காஷ்மீரின் குப்வாரா பகுதியில், இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள சர்சைக்குரிய எல்லைப்பகுதியின் அருகே, 6 வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மறைந்திருந்த தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி சுடத் துவங்கினர். இதில் 2 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டாலும், அதில் ஒருவர் மோசமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பின்னர் தெரிய வந்தது. 

அந்த வீரர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 முதல் 5 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close