உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்: இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் தேர்வு!! 

  சுஜாதா   | Last Modified : 08 Jun, 2018 05:18 am

iits-iisc-climb-in-university-list-figure-in-top-200

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்,மும்பை (IIT), பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு மற்றும் டெல்லி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (IIT-D) ஆகியவை உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின்  பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை (2019-ம் ஆண்டுக்கானது) தயாரித்து வெளியிட்டுள்ளது அதில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன. உலகின் தலைசிறந்த  1000 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், கடந்த ஆண்டு 20 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 4  பல்கலைக்கழகங்கள் அதிகரித்து, அதன் எண்ணிக்கை 24  ஆக உயர்ந்துள்ளது.

200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. 17 இடங்கள் மேலே வந்து 162-வது இடத்தில் உள்ளது. . கடந்த ஆண்டு பிடித்த 172 ஆவது  இடத்தை டெல்லி ஐ.ஐ.டி. தக்க வைத்துக்கொண்டு உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 

"இந்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் நம்பிக்கை உறுதிப்படுத்துதல் மற்றும் இந்திய நிறுவனங்களின் தரவரிசையை மேம்படுத்த இந்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் செயல்திறனை அங்கீகரிப்பது" என்று உயர் கல்வி மற்றும் மனிதவள அமைச்சின் செயலாளர் ஆர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close