காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் தூக்கில் தொங்குவேன்: ஆந்திர துணை முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 08:29 am

i-will-hang-myself-if-td-party-forms-alliance-with-congress-ap-deputy-cm

காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தால் தூக்கில் தொங்கிவிடுவேன் என்று ஆந்திர துணை முதல்வர் கூறினார். 

கர்நாடகாவின் முதல்வராக குமாரசாமி பதவியேற்ற நிகழ்ச்சியில் பல மாநிலங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அவர் ஒன்றாக கலந்துகொண்டது ஆந்திர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

2019ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக எதிர்கட்சிகளான பா.ஜ.க மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. 

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பதனை முற்றிலும் மறுத்தார், தெலுங்கு தேசம் கட்சி அப்படி ஒரு முடிவை எடுத்தால் தான் தூங்கில் தொங்கிவிடுவேன் என்றார்.

மேலும் ராகுல் காந்தியுடன் கை குலுக்குவதால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அர்த்தம் இல்லை என்வும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து பாஜக தேசிய செயலாளரான ராம் மாதவ் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்த என்.டி.ராமாராவ் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்துவதை கொள்கையாக கொண்டிருந்தார், எனினும் தற்போது சந்திரபாபு நாயுடு ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close