காங்கிரஸ் கொள்கைகள் சரி என பிரணாப் பேசியுள்ளார்: ப.சிதம்பரம் பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 06:14 pm
chidambaram-lauds-pranab-mukkerjee-s-speech

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி தனது உரையின் மூலம் காங்கிரஸ் கொள்கைகள் தான் சரி என்று கூறியிருக்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும். மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்" என பேசினார்.  பிரணாப் முகர்ஜியின் உரைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட காங்கிரஸ் அவரது கருத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், “காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கொள்கைகள் சரி என்று கூறியதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி விமர்சித்துள்ளார்” என பதிவிட்டிருக்கிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close