ஒரே வாரத்தில் 2வது ஜாகுவார் போர் விமான விபத்து - விமானி தப்பினார்!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 01:56 pm

air-force-jaguar-fighter-jet-crashes-in-jamnagar

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் இன்று கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி தப்பித்தார். 

குஜராத் மாநிலம் ஜாம் நகரில், இன்று காலை 9 மணி அளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி சிறு காயங்களுடன் தப்பினார். விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக் காலங்களில் விமானி தப்பிக்கும் பாதுகாப்பு அம்சம் சரியாக செயல்பட்டதால் விமானி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்புதான் (கடந்த 5ம் தேதி) இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய மூத்த விமானப்படை விமானி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு நேற்றுதான் நடந்தது. ஓரே வாரத்தில் இரண்டு விமான விபத்துக்கள் நடந்திருப்பது பாதுகாப்புத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close