ராஜீவ்காந்தி போல் மோடியை படுகொலை செய்ய திட்டம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jun, 2018 06:12 pm

maoists-planned-to-assassinate-narendra-modi

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக போலீஸார் கைப்பற்றிய கடிதத்தில்  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு, மகாராஷ்ட்ர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். மக்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்கள் 5 பேரை கைது செய்த நிலையில், அவர்களுக்கு வந்த கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் ரோனா ஜேக்கப் என்பவரை அண்மையில் போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ரோனாப்பிடம் இருந்து மகாராஷ்டிரா போலீஸ் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளது. அந்த கடிதத்தில் ஹிந்து பாசிசத்தை தோற்கடிப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்றும், ராஜீவ் காந்தி படுகொலை போன்ற நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடித விவகாரம் உளவுத்துறைக்கு சென்ற நிலையில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close