உ.பி மருத்துவமனையில் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழப்பு; ஏ.சி பழுது காரணமா?

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:17 pm
five-patients-die-within-24-hours-in-kanpur-hospital-kin-blame-faulty-acs

ஏ.சி கோளாறால் உத்தரபிரதேச மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மக்க மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் இன்று திடிரென 5 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதையடுத்து, நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக அவர்களது உறவினர்கள் கூறுகையில், "கடந்த புதன்கிழமை முதல் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஏ.சி பழுதடைந்து உள்ளது. அதனால் அவர்கள் மரணமடைந்துள்ளனர்" என தெரிவித்தனர். இது தொடர்பாக தலைமை செவிலியர் ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து இது மறுக்கப்பட்டுள்ளது. "ஏ.சி பழுதடைந்துள்ளது என்பது உண்மை தான். ஆனால் இறந்தவர்கள் ஏ.சி இல்லாததால் இறக்கவில்லை. 2 பேர் மாரடைப்பு காரணமாகவும், 3 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது, அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close