பிளாஸ்டிக் கொடுத்தால் காசு கொடுக்கும் மெஷின்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jun, 2018 06:02 am

railways-new-offer-drop-plastic-bottle-det-money-in-return

குஜராத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம் கொடுக்கும் புதிய மெஷின் ஒன்றை அம்மாநில அரசு வடிவமைத்துள்ளது. 

அடுத்தாண்டு முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிக்க தொடர்ச்சியான விழிப்புணர்வு, மறுசுழற்சியில் நவீன தொழில்நுட்பம் என அரசு சார்பில் பல பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இந்நிலையில் குஜராத் மாநில வதோரா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யும் பொருட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால், அதன் எடைக்கேற்ப பணம் தருகிறது. ஏடிஎம் மெஷின் போன்று அமைந்துள்ள இந்த இயந்திரத்தில் பிளாஸ்க்கை போட்டால் அது நான்றாக உடைத்து, எடைக்கு தகுந்தால் போல் பணம் வழங்குகிறது. அதாவது பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டவுடன் நமது மொபைல் எண்ணை கேட்கும், எண்ணை பதிவு செய்தவுடன் நமது பேடிஎம் கணக்கில் பிளாஸ்டிக்கிற்கான பணத்தை செலுத்துகிறது. இவ்வாறு நம்மிடமிருந்து மெஷின் பெறும் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு அறிமுகப்படுத்திவுள்ள இந்த புதிய இயந்திரத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கொண்டுவந்தால் சமூக நலனுக்காக இல்லையென்றாலும் காசுக்காகவாவது பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் முன்வருவார்கள்! 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close