நெருப்பில் பூத்த மலர் தான் பிரதமர் மோடி: பொன்.ஆர்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:47 pm

central-minister-pon-radhakrishnan-says-about-modi

நெருப்பில் பூத்த மலர் தான் பிரதமர் மோடி, தீவிரவாதிகள் அவருக்கு விட்ட சவால், நாட்டுக்கே விடப்பட்ட சவால் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "பிரதமர் மோடி நெருப்பில் பூத்த மலர். அவர் குஜராத் முதல்வராக இருந்த போது முதலில் சிறு இயக்கங்கள், மாநில அமைப்புகளின் மிரட்டல்களை பார்த்தவர். பல சவால்கள், கொலை மிரட்டல்களை அவர் சந்தித்துள்ளார். அப்படி இருக்கையில் தற்போது நாட்டின் பிரதமர். எனவே அவருக்கு தீவிரவாதிகள் விட்ட சவால் நாட்டுக்கே விடப்பட்ட சவால். இதை சர்வசாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. இதற்கு சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். யார் இந்த மிரட்டலை விடுத்தார்கள், எங்கிருந்து வந்தது என்பது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார். 

பின்னர் செய்தியாளர்கள், "மெர்சல், இரும்புத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.கவினர் தற்போது காலா படத்தை தியேட்டரில் சென்று பார்க்க காரணம் என்ன?" என கேட்டனர். அதற்கு அவர், "நான் காலாவையும் பார்க்கவில்லை. இரும்புத்திரையையும் பார்க்கவில்லை. எந்த படத்தையும் பார்க்கவில்லை. நீங்கள் போட்டுக்காட்டினால் நான் பார்க்கிறேன்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close