இந்துக்களுக்கு மட்டும்தான் பணியாற்ற வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ கட்டளை

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Jun, 2018 06:29 pm

bjp-mla-basanagouda-patil-yatnal-tells-work-for-hindus-not-muslims

இந்துக்களுக்கு மட்டும்தான் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ பாசன கவுடா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ பாசன கவுடா பாட்டில், “அரசாங்க அலுவலர்கள் இந்துக்களுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும். ஏனெனில் தேர்தலில் நான் இந்துக்கள் வாக்குகளால் தான் வெற்றிபெற்றேன், இஸ்லாமியர்களால் இல்லை. எனவே இந்துகளுக்கு தான் பணியாற்ற வேண்டும். மேலும் தொப்பி மற்றும் புர்கா அணிந்த முஸ்லீம்கள் யாரும் எனது அலுவலகத்திற்கு வரக்கூடாது” என கூறினார். 

இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாசனகவுடா,  “என்னுடைய பேச்சியில் என்ன தவறு உள்ளது? தேர்தலுக்கு முன்னரே எனக்கு முஸ்லீம்கள் வாக்கு வேண்டாம். இந்துக்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என கூறிவிட்டேன். எனவே இந்துக்களால் தான் நான் வெற்றிப்பெற்றுள்ளேன்” என கூறினார். மேலும், இது தொடர்பாக கேள்வி கேட்ட பத்திரிகையார்கள் மீதும் பாய்ந்துள்ளார் பாசன கவுடா. "நான் இப்படி பேசியதற்காக என்னிடம் கேள்வி கேட்கின்றீர்களே... இதேபோல் இஸ்லாமிய தலைவர்களிடம் கேள்வி எழுப்பியது உண்டா? ஊடகம் ஒரு பக்க சார்புடன் நடக்கிறது" என்றார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த பாஜக எம்.எல்.ஏவுக்கு எதிராக நெட்டிசன்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பா.ஜ.க இந்துத்துவ அரசியல் செய்கிறது. மதவாத அரசியலை தூண்டி மதவெறியை ஏற்படுத்திகிறது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு உதவிகள் இல்லை என்று கூறியுள்ள பாசன கவுடா, நாடாளுமன்ற உறுப்பினராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close