• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

ஆர்.எஸ்.எஸ் சல்யூட் அடிக்கும் பிரணாப் முகர்ஜி: மார்பிங் படம் வைரலானது!

  Newstm News Desk   | Last Modified : 09 Jun, 2018 06:07 am

pranab-s-rss-salute-goes-viral-congress-blames-bjp-it-cell

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பயிற்சி விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையில், அவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் சேர்ந்து அந்த அமைப்பின் சல்யூட் அடிக்கும் போலி போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப் முகர்ஜியை, தங்கள் உறுப்பினர்களின் பயிற்சி விழா ஒன்றிற்கு அழைத்தது. அவர் அதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள், வெளிப்படையாகவே இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். பிரணாப் முகர்ஜியின் மகள், காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி, ட்விட்டரில் தனது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்தார். "அங்கு நீங்கள் ஆற்றும் உரையை அங்கிருக்கும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால், நீங்கள் கலந்து கொண்ட புகைப்படத்தை வைத்து தங்களின் மோசமான கொள்கையை பரப்ப பயன்படுத்துவார்கள்" என கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பிரணாப் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலானது. அதில்,  ஆர்.எஸ்.எஸ் தொப்பியை பிரணாப் அணிந்து நிற்பது மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களை போலவே சல்யூட் அடிப்பது போல தெரிந்தது. ஆனால், அந்த போட்டோ மார்ப் செய்யப்பட்டது என பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதாவின் ஐடி குழு தான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. "இதைத்தான் நான் முதலிலேயே கூறினேன். சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை அதற்குள் தங்கள் வேலையை பாரதிய ஜனதாவின் மோசடி (ஐடி) செல் செய்துவிட்டது" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close