குடியரசுத் தலைவர் மாளிகையில் இறந்து கிடந்த ஊழியர்!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 06:05 am
employee-found-dead-in-rashtrapati-bhavan

டெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் 4ம் பிரிவு பணியாளரான த்ரிலோகி சந்த், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 50 வயதான அவர், ராஷ்டிரபதி பவனில் உள்ள ஊழியர்களுக்கான குடியிருப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து மோசமான வாடை வந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து சந்தின் உடலை எடுத்துச் சென்றனர். அவர் இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close