மும்பை ஃபோர்ட் பகுதி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 10:08 am
massive-fire-breaks-out-inside-patel-chambers-in-mumbai-s-fort-area

மும்பை ஃபோர்ட் பகுதியில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை ஃபோர்ட் அருகே உள்ள  பட்டேல் சம்பர்ஸ் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ பிடித்தது. வேகமாக பரவி அனைத்து தலங்களுக்கும் பரவியது. பின்னர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 16 தீயணைப்பு இயந்திரங்கள், 11 டேங்கர் லாரிகள் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, கட்டிட சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று கடந்த வாரம் மும்பை சிண்டியா பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close