மும்பையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 12:15 pm

strong-monsoon-current-likely-to-hit-mumbai-imd

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. கனமழையினால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, "மும்பை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மேலும், கோவா கர்நாடகா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள், ஆந்திரா, கேரளா கடலோரப்பகுதிகள் ஆகிய இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால் மும்பை, கோவாவில் விமானபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதலே விமானங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. நேற்றே மும்பையில் சாலை முழுக்க தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், தொடர் கனமழையால் அதிக வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மழையினால் பாதிப்பு ஏற்பட்டால், மும்பை மக்கள் 1916 என்கிற எண்ணிலும், மும்பையை சுற்றியுள்ள மற்ற மாவட்ட மக்கள் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவசர உதவிகளை கேட்டுப் பெறலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close