காவிரி: உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 02:03 pm
karnataka-have-to-announce-the-members-in-cauvery-management-authority-ordered-by-central-govt

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்கற்றுக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசின் இதழில் வெளியிட்டது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கற்றுக்குழு என இரண்டு அமைப்புகளுக்கும் தலா ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். இதற்காக முதலாவதாக தமிழகம் சார்பில் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, , அதைத்தொடர்ந்து கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் தங்களது உறுப்பினர்களை அறிவித்தன. மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பிரபாகரும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினராக, திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமாரும் செயல்படுவர் என அறிவித்தது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி,கேரள அரசுகளும் தங்களது உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டன. 

கர்நாடக அரசு மட்டும் உறுப்பினர் யார் என்பது குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து வருகிற ஜூன் 12ம் தேதிக்குள் கர்நாடகா சார்பில் குழுவில் பங்காற்றும் இரண்டு உறுப்பினர்கள் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் உசேனை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close