டெல்லியில் என்கவுன்டர்: பிரபல ரவுடி உள்பட 4 பேர் சுட்டுக் கொலை

  Padmapriya   | Last Modified : 09 Jun, 2018 10:54 pm

gangster-rajesh-bharti-and-three-other-wanted-criminals-were-killed-in-south-delhi-s-chhatarpur-area-eight-delhi-police-personnel-were-injured-in-the-encounter

டெல்லியில் ரவுடிகள் - போலீஸ் இடையே நடந்த மோதலில் பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி உள்பட கூட்டாளிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீர்பூர் பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த ராஜேஷ் பார்தி மற்றும் அவனது கும்பல் டெல்லியில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, டெல்லி போலீஸின் சிறப்புப் படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர். 

போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு நடத்த துவங்கினர். உடனடியாக போலீஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. தூப்பாக்கிச் சூடு முடிவடைந்த நிலையில் உள்ளே சென்றபோது, ரவுடிகள் நான்கு பேர் இறந்து கிடந்தனர். ஒருவன் மட்டும் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் தரப்பில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் - ரவுடிகள் திடீர் துப்பாக்கிச் சண்டை காரணமாக அந்தப் பகுதியே பதற்ற நிலையில் உள்ளது. இதனால், ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரவுடி ராஜேஷ் பார்தி, பணம் பரிப்பு, கார் திருட்டு மற்றும் பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேடப்படும் குற்றவாளி ஆவார். இவரை ஹரியானா காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. கடும் போலீஸ் காவலில் இருந்து தப்பிய ரவுடி ராஜேஷ் பார்தி, டெல்லியில் பதுங்கி குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close