இந்தியாவில் பிரசவகால உயிரிழப்பு குறைந்துள்ளது:யுனிசெப்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jun, 2018 07:25 am

unicef-india-commends-india-s-impressive-progress-in-reducing-maternal-deaths

இந்தியாவில் பிரசவகாலத்தில் கற்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 78 ஆயிரம் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் உயிரிழக்கின்றனர் என, ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் சர்வதேச அளவில் குழந்தைகள் நிலை பற்றிய தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நாடு முழுவதும் நிகழும் பிரசவ கால இறப்புகள், சிசு மரணங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி பிரசவ கால பெண்களின் இறப்பு விகிதம் இந்தியாவில் இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின் படி இந்தியாவில் பிரசவகால பெண்களின் இறப்பு விகிதம் 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் குறைந்துள்ளது.  

பொதுவாக கர்ப்பிணிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட காரணம் ஊட்டச்சத்து குறைவு, முறையான தடுப்பூசி வழங்கப்படாதது மற்றும் மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டில் அரங்கேறும் பிரசவங்களே என யுனிசெப் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் பெண்கள் பிரசவகால பாதிப்புகளில் இறந்துள்ளனர். இதுமற்ற மாநிலங்களை விட குறைவான விகிதமே என யுனிசெப் தெரிவித்துள்ளது 

Advertisement:
[X] Close