உ.பி., டெல்லியில் புழுதி புயல்: 26 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 09:11 am
severe-dust-storm-in-delhi-and-up-flights-diverted

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீசிய புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியாகினர். மேலும் டெல்லியில் புழுதி புயல் வீசியதால் 27 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் புழுதிப்புயல் வீசியது. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், கன்னெளஜ் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் எந்த உயிரிழப்பும் ஏற்படவிஇதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் யோக் ஆதித்தயநாத் பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தினார்.

மேலும் டெல்லியில் மாலை 5.20 மணியளவில், திடீரென இருள் சூழ்ந்ததுடன், புழுதிப் புயலும் வீசியது.  பலத்த மழையும் பெய்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். டெல்லியில் சில மணி நேரங்களுக்கு, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம், என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்தது.

அங்கு மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில், புழுதிப் புயல் வீசும் என்றும், உள்ளூர் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கவனிக்குமாறும், டெல்லி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி, வீடுகளில் மின்சார இணைப்புகளை துண்டிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாலையில் பலத்த புழுதி காற்று வீசியது. இதனால் டெல்லிக்கு வந்த 27 விமானங்கள் பாதைமாற்றம் செய்யப்பட்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close