இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: 3 தீவரவாதிகள் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 10:07 am

3-terrorists-killed-in-kupwara-jammu-kashmir

இந்திய எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் தொடர்ந்து வாதிகள் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு நடைபெற்றது.

இதில் இந்திய பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், எத்தனை பேர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அங்கிருந்து தப்பி சென்ற தீவிரவாதிகள் குறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close