12வது நாளாக மீண்டும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 04:13 pm
petrol-diesel-prices-goes-down-for-12th-consecutive-day

பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 25 பைசா அளவுக்கு முக்கிய நகரங்களில் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 20 பைசா குறைக்கப்பட்டது.

கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை உச்ச கட்டத்தை எட்டியது. மே 30ம் தேதி, அதிகபட்சமாக மும்பையில், ரூ.86.23 எனவும், சென்னையில் ரூ.81.42 என இருந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதன்பின் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 1 பைசா என குறைத்தது சர்ச்சை கிளப்பியது. ஆனால், தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், இன்று பெட்ரோல் விலை 23-25 பைசா குறைக்கப்பட்டுள்ளது. 

தற்போது மும்பையில், லிட்டருக்கு ரூ.84.61 என்றும், சென்னையில் 79.69 என்றும் உள்ளது பெட்ரோல் விலை. டீசல் விலையும் 18-20 பைசா குறைக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.72.51; சென்னையில் ரூ.71.89 என்ற விலையில் டீசல் விற்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close