ரூ.10000க்கு காங்கிரஸ் அலுவலகம்- ஓஎல்எக்ஸ் அட்ராசிட்டி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jun, 2018 08:51 pm

kerala-pradesh-congress-committee-kpcc-has-been-put-on-sale-on-olx

கேரளாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் ரூ. 10000 க்கு விற்கப்படும் என ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளப்பரபடுத்தப்பட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான இந்திரா பவன் விற்பனைக்கு என அனீஸ் என்பவர் ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். விலை ரூ.10,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி ராஜயசபா தேர்தல் நடக்கிறது. கேரளத்தில் ஆளும் சி.பி.எம். கூட்டணிக்கு 2 சீட்டுகளும், எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கும். காங்கிரஸ் கட்சியின் ஒரு ராஜ்ய சபா சீட்டு அக்கட்சியின் கூட்டணியை சேர்ந்த மணி என்பவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மணி, காங்கிரஸில் இருந்து பிரிந்து கேரள காங்கிரஸ்(எம்) என்ற கட்சியை புதிய கட்சியை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் இடையே சலசலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களை விற்கும் ஓ.எல்.எஸ் இணையதளத்தில் காங்கிரஸ் அலுவலகம் விற்பனைக்கு... விலை ரூ. 10, 000 என அனீஸ் என்பவர் பதிவிட்டுள்ளார். மேலும் 58,888 சதுர அடி கொண்ட இந்த அலவலகத்தை விருப்பமுள்ள கட்சிகள் வாங்கிக்கொள்ளலாம். முக்கியமாக கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம். சுதிரன் கூறிகையில், "காங்கிரஸ் கட்சியினருக்கு ராஜ்ய சபா சீட்டை கொடுக்காமல், மணிக்கு கொடுத்தது காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கலந்து பேசி முடிவெடுக்காமல், ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவு... இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும்” என கூறினார். 


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.