இந்தியாவில் வன்முறைகளால் ரூ. 80 லட்சம் கோடி இழப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 06:43 am

violence-costs-india-s-gdp-over-1-trillion

இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு வன்முறை செயல்களால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் உணவு, நீர், உறைவிடம் என பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு கூட மக்கள் போராட வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக வெடிப்பதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைகிறது. போராட்டங்களால் வேலை வாய்ப்புகளும் குறைகின்றன. 

Institute for Economics and Peace என்ற நிறுவனம் 163 நாடுகளிடையே ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த வன்முறையினால் ரூ.80 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைகள் அமைதியின்மையை ஏற்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்படைய செய்கிறது. வெளியுறவு சிக்கல்கள், பயங்கரவாதிகள் தாக்குதல், அரசியல் கலவரங்கள், எல்லை பிரச்னை ஆகிய காரணங்களாலே பெரும்பாலும் வன்முறை வெடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பொது சொத்துக்கள் பாதிக்கப்படுகிறது. வன்முறைகளால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 9% என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பாதிப்பதால் நமக்கு என்ன பிரச்னை என கேட்கலாம்? ஆனால் வன்முறைகளால் ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close