ராகுல் காந்தி கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: பா.ஜ.க

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 11:10 pm
blessed-to-get-congress-as-opposition-amit-shah

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு குழந்தை என்றும், அவர் போல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்க பாரதிய ஜனதா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியடைந்ததை வைத்து பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, தனது கட்சியின் சாதனைகளை பற்றியும் பேச வேண்டும் என அமித் ஷா கூறினார். 

"பாரதிய ஜனதா இடைத்தேர்தல்களில் தோல்வியை தழுவியதை நினைத்து சந்தோஷப்படுகிறார் ராகுல் காந்தி. இப்படி ஒரு எதிர்க்கட்சி கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 8 இடைத் தேர்தல்களில் நங்கள் தோற்றுள்ளோம். ஆனால், 14 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளோம்" என்றார்.

மேலும், ராகுலை சின்ன பையன் என குறிப்பிட்டு, "70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த உங்கள் கட்சி என்ன சாதனை செய்தது?" என்றும் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close